மணல் கடத்திய 4 பேர் கைது

நெல்லையில் மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-06-30 20:02 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மணக்காடு ஆற்றங்கரை பகுதியில் சட்டவிரோதமாக மினி லாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். இதைக்கண்ட போலீசார் மணல் திருடிய மணக்காடு பகுதியை செல்லதுரை (வயது 20), மாடசாமி (21), லட்சுமணன் (19), கனி (23) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் மணல் அள்ளிய மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்