புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்

வெம்பக்கோட்டை அருகே புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டது.

Update: 2021-06-30 19:47 GMT
தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த வெற்றிலையூரணியில் போதிய பஸ் வசதியில்லாமல் மக்கள் சிரமப்படுவதால் பஸ் இயக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள்  கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முதல் சிவகாசியிலிருந்து விஸ்வநத்தம், வெற்றிலையூரணி, தாயில்பட்டி வழியாக வெம்பக்கோட்டை, கோட்டைப்பட்டி வரை அரசு பஸ்  தாயில்பட்டியிலிருந்து இயக்கப்பட்டது. இதன்மூலம் எண்ணற்ற கிராம மக்கள் பயன்பெறுவர். பஸ் இயக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், ஊராட்சி நிர்வாகத்தினருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்