சிறுகனூர் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு

சிறுகனூர் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2021-06-30 19:35 GMT
சமயபுரம், 
சிறுகனூர் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

அரிவாள் வெட்டு

சிறுகனூர் அருகே உள்ள புதூர் உத்தமனுரை சேர்ந்தவர் கொடியரசன் (வயது 29). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச்சேர்ந்த ஆண்ட்ரொ டேவிட் (26) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று கொடியரசன் மதுபோதையில் ஆண்ட்ரொடேவிட் வீட்டின் முன்பு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றிய நிலையில் கொடியரசன் ஆண்ட்ரோ டேவிட்டை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. 

இதில் காயமடைந்த அவர் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொடியரசனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்