ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் 6 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் 6 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். நரிக்குடி, ஆலங்குளம், மல்லாங்கிணறு, சிவகாசி, எம்.ரெட்டியபட்டி கிருஷ்ணன்கோவில் ஆகிய 6 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 150 பேர் கலந்து கொண்டனர்.