கருப்பு பூஞ்சை நோய்க்கு வக்கீல் பலி

கருப்பு பூஞ்சை நோய்க்கு வக்கீல் பலியானார்.

Update: 2021-06-30 19:17 GMT
நச்சலூர்
கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள நெய்தலூர் காலனி பகுதியை சேர்ந்த சவுந்திர பாண்டியன் (வயது 51). வக்கீலான, இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்தநிலையில் சவுந்திரபாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டார். இதைடுத்து அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் வீடு திரும்பிய அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று பரிதாபமாக இறந்தார். கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்