கிருஷ்ணராயபுரத்தில் மளிகைக்கடையில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 5½ பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு

கிருஷ்ணராயபுரத்தில் மளிகைக்கடையில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 5½ பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-06-30 19:13 GMT
கிருஷ்ணராயபுரம்
தாலிச்சங்கிலி பறிப்பு
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி கண்ணகி (வயது 60). இவர் அவரது வீட்டின் அருகே சிறிய மளிகைக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு கண்ணகி மட்டும் மளிகைக்கடையில் தனியாக வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.  அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 25 வயது மதிக்கத் தக்க 2 பேர் மாஸ்க் அணிந்து கொண்டு மளிகைக்கடைக்கு வந்தனர்.    பின்னர் கண்ணகி கண் இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் தாலிச்சங்கிலியை ஒருவர் பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணகி  திருடன்... திருடன்... என சத்தம் போட்டனர். 
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதையடுத்து இவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் 2 பேரும் தாலிச்சங்கிலியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.  இதுகுறித்து கண்ணகி கொடுத்த புகாரின்பேரில், மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து, தாலிச்சங்கிலியுடன் தப்பி சென்ற 2 மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்