முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள்

முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள்

Update: 2021-06-30 18:34 GMT
மானாமதுரை
மானாமதுரை பகுதியில் கொரோனவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து நிவாரண பொருட்களை தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கி வருகின்றார். நேற்று முடித்திருத்தும் தொழிலாளர்கள் 92 பேருக்கு நிவாரண பொருட்களாக அரிசி, காய்கறி தொகுப்புகளை  வழங்கினார். முடித்திருத்தும் தொழிலாளர்கள் எம்.எல்.ஏ.விடம், வங்கிகளில் கடனுதவி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், நில பட்டாக்கள் வழங்கவும், வீட்டுமனை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதில் மானாமதுரை யூனியன் தலைவர் லதா அண்ணாத்துரை, நகர் செயலாளர் பொன்னுச்சாமி, துணை செயலாளர் பாலசுந்தரம், நிர்வாகிகள் அதியமான், சதீஸ் மற்றும் முடித்திருத்தும் தொழிலாளர்கள், சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்