சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரகேடு

சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரகேடு

Update: 2021-06-30 18:34 GMT
இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள சீத்தூரணி சாலையோரம் குப்பைகள் மலைபோல் தேங்கி உள்ளது. இதனால் சுகாதாரகேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் சாலையில் செல்வோர் முகம் சுளிக்கும் அளவில் துர்நாற்றம் வீசுகிறது. காலையில் நடைபயிற்சி செய்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இளையான்குடி நகர் பகுதி பாரதியார் தெரு கடைசியில் குப்பை குவிந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலை பலமுறை நடந்துள்ளது. சீத்தூரணி செல்லும் சாலை நகரகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி. ஆதலால் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் அப்பகுதியை கண்டு கொள்வதில்லை. ஊராட்சிக்கு இந்த இடம் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதால் ஊராட்சி துப்புரவு பணியாளர்களும் கண்டு கொள்வதில்லை. இதனால் அப்பகுதியில் குடியிருப்புவாசிகள், நடைபயிற்சி மேற்கொள்பவர்கள், சீத்தூரணி, கொங்கம்பட்டி, கல்லூரணி ஆகிய கிராமங்களுக்கு செல்வர்களும் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்