ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் வீட்டில் திருட்டு
ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் வீட்டில் திருட்டு
கோவை
கோவை பீளமேடு அருகே உள்ள விளாங்குறிச்சி ரோட்டை சேர்ந்தவர் கண்ணன் (வயது 70). இவர் தனியார் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
கடந்த 23-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் மதுரையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார்.
பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, முன்பக்க கதவு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தன.
அதில் இருந்த வெள்ளி தட்டு, குங்குமச்சிமிழ் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.