இ சேவை மையங்களில் குவியும் மக்கள் கூட்டம்
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க இ-சேவை மையங் களில் பொதுமக்கள் கூட்டம் குவிந்தது. இதனால் அங்கு கூடுதல் பணி யாளர்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கோவை
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க இ-சேவை மையங் களில் பொதுமக்கள் கூட்டம் குவிந்தது. இதனால் அங்கு கூடுதல் பணி யாளர்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கில் தளர்வுகள்
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் படிப்படியாக தொற்று குறைந்து வருகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் புதிதாக ரேஷன் கார்டுகள் விண்ணப்பிப்பது, அதில் பெயர் சேர்ப்பது, திருத்தம் செய்வது உள்பட பல்வேறு காரணங் களுக்காக தற்போது பொதுமக்கள் இ-சேவை மையங்களுக்கு சென்று வருகிறார்கள்.
இ-சேவை மையங்களில் கூட்டம்
அதன்படி கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் காத்திருந்து விண்ணப்பித்தனர்.
அதுபோன்று பெரும்பாலான இ-சேவை மையங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்களின் நலன் கருதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டார். இதனால் ஏராளமான பொதுமக்கள் பயன் அடைந்தனர்.
ரேஷன் கார்டு விண்ணப்பம்
மேலும் ரேஷன் கார்டு வைத்துள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 ஓய்வுதியம் வழங்கப்படும் என்று பலர் கூறி வருகிறார்கள்.
இதனால் கொரோனா நிவாரண நிதி பெறாதவர்களும், அரசின் பல்வேறு கட்ட நலத்திட்ட உதவி பெற விரும்புபவர்களும் ரேஷன் கார்டு விண்ணப்பிக்க இ-சேவை மையத்துக்கு வருகின்றனர்
அதுபோன்று திருத்தம், பெயர் நீக்கம் உள்பட வேறு சில பணிகளுக்காகவும் வருகிறார்கள். இங்கு ஒரே அலுவலக வளாகத்தில் இ- சேவை மையம், ஆதார் கார்டு மையம் மற்றும் இன்சூரன்ஸ் அலுவலகமும் இருப்பதால் கூட்டம் அதிகமாக உள்ளது.
கூடுதல் பணியாளர்கள்
எனவே இ-சேவை மையத்தில் பணியாளர்களும் குறைவாகதான் உள்ளனர். ஆனால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமித்தால் பயனாக இருக்கும். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.