சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது

Update: 2021-06-30 18:07 GMT
விராலிமலை, ஜூலை.1-
திருச்சி மாவட்டம் சமயபுரம் கைலாசாநகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் மாதவன் (வயது 29). கொத்தனாரான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைக்கு வந்துள்ளார். கடைவீதியில் நடந்து சென்ற அவர் அங்குள்ள ஒரு வீட்டில் 12 வயது சிறுமி ஒருவர் தனியாக இருப்பதை கண்டு வீட்டுக்குள் புகுந்து கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு அந்த சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். அப்போது கடைக்கு சென்றிருந்த சிறுமியின் அண்ணன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஜன்னல் வழியாக பார்த்த போது, தங்கையிடம் மாதவன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து தங்கையை மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்