செல்போனில் தகவல் தெரிவித்தால் வீடு தேடி சென்று மது விற்ற நபர் கைது
செல்போனில் தகவல் தெரிவித்தால் வீடு தேடி சென்று மது விற்ற நபர் கைது
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். கட்டேரியம்மன் கோவில் பகுதியில் 2 பேர் ஒரு மோட்டார்சைக்கிளில் சாராயத்தை வைத்து விற்பனை செய்தனர். அவர்களை போலீசார் மடக்கினர். அதில் ஒருவர் பிடிபட்டார். மற்றொருவர் தப்பியோடி விட்டார். பிடிபட்டவர் தங்கராஜ் (வயது 48) என்றும், தப்பியோடியவர் மகன் விஜி என்றும் தெரிய வந்தது.
தங்கராஜ் வாலாட்டியூரை அடுத்த பச்சைமிளகாய் வட்டம் பகுதியில் வசித்து வருகிறார். தந்தை, மகன் சேர்ந்து சாராயத்தை மோட்டார்சைக்கிளில் வைத்துக் கொண்டு விற்பனை செய்தனர்.
மேலும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினால், வாடிக்கையாளர்கள் வரச் சொல்லும் இடம் வீடு மற்றும், வேறு எந்த இடங்கள் என்றாலும் அவர்கள் சம்பவ இடத்துக்கு மோட்டார் சைக்கிளில் நேரில் சென்று அவர்களுக்கு சாராயம் விற்று வந்ததாக, கூறினார்.
இதையடுத்து தங்கராஜ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 20 லிட்டர் சாராயம், மோட்டார்சை்ககிள் பறிமுதல் செய்யப்பட்டது. இவரின் மகன் விஜியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தந்தை, மகன் மீது ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.