வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-06-30 17:16 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டியை சேர்ந்தவர் மணிவாசகம் (வயது 40). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது அக்கா இறந்ததால் உடைபாளையத்திற்கு வீட்டை பூட்டி விட்டு சென்றதாக தெரிகிறது. பின்னர் திப்பம்பட்டியில் உள்ள வீட்டிற்கு திரும்பி வந்தார். 

குளித்து விட்டு வீட்டிற்குள் செல்வதற்காக பின்பக்கமாக அவர் சென்றார். அப்போது சமையல் அறை கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரம் பணம் திருடுபோனது தெரியவந்தது.

 இதுகுறித்து கோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. 

இதை தொடர்ந்து மாட்டு சந்தை பகுதியில் நின்ற 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (28), பழனிசாமி (43) என்பதும், மணிவாசகம் வீட்டில் பணத்தை திருடியதும் தெரியவந்தது. 

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். புகார் கொடுத்த ஒரே நாளில் போலீசார் பணம் திருடிய நபர்களை கைது செய்தது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகள்