ரங்கசமுத்திரத்தில் மின்வாரிய ஊழியர் தற்கொலை

ரங்கசமுத்திரத்தில் மின்வாரிய ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-30 17:16 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ரங்கசமுத்திரம் லட்சுமி நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட் (வயது 51). மின்வாரியத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது அண்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால் மன வருத்தத்தில் அவர் இருந்து வந்ததாக தெரிகிறது. 

இதற்கிடையில் உடல்நிலை சரியில்லாமல் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஏற்கனவே ஒரு முறை தற்கொலைக்கு முயன்றதால் அவரை உறவினர்கள் நன்கு கவனித்து வந்தனர். இதற்கிடையில் மன விரக்தியில் இருந்த ஆல்பர்ட் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார்வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்