கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 118 பேருக்கு கொரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 118 பேருக்கு கொரோனா;

Update: 2021-06-30 17:06 GMT
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 26 ஆயிரத்து 946 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 194 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ள நிலையில் 25 ஆயிரத்து 892 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். 

இந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் புதிதாக 118 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 64 ஆக உயர்ந்தது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 978 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



மேலும் செய்திகள்