கரடி நடமாட்டம் அதிகரிப்பு

கரடி நடமாட்டம் அதிகரிப்பு.;

Update: 2021-06-30 17:03 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீத வனப்பகுதி உள்ளது. இங்கு காட்டுயானை, சிறுத்தைப்புலி, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீரை தேடி அலையும் வனவிலங்குகள் சில நேரங்களில் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்து விடுகின்றன. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ள நிலையில், குடியிருப்பு பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளுக்குள் கரடிகள் புகுவது அதிகமாக உள்ளது.  

இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் கரடிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்