சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2021-06-30 16:56 GMT
குன்னூர்,

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அடிக்கடி விபத்து

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு சாலை செல்கிறது. இது நீலகிரி மாவட்டத்தின் பிரதான சாலையாக இருக்கிறது. இந்த சாலையில் காட்டேரி முதல் கல்லாறு வரை 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

மேலும் பல்வேறு குறுகிய வளைவுகளும் காணப்படுகின்றன. இதற்கிடையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையானது சில இடங்களில் குறுகிய மலைப்பாதையாக உள்ளதால், அடிக்கடி விபத்து நிகழ்கிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

தடுப்புச்சுவர்கள்

இந்த நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே சாலையை விரிவுபடுத்துதல், சிறு பாலங்கள் மற்றும் தடுப்புச்சுவர்கள் கட்டுதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. இதனால் சாலையில் வாகன போக்குவரத்து குறைந்து உள்ளது. இதனை பயன்படுத்தி சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்