மணல் அள்ளியவர் கைது

ஆத்தூர் பகுதியில் மணல் அள்ளியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-30 16:40 GMT
ஆறுமுகநேரி:

ஆத்தூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது மேலஆத்தூர் பஞ்சாயத்து சுடுகாடு அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையில் சிலர் ஆற்று மணல் அள்ளிக் கொண்டு இருந்தனர். போலீசார் விரைந்து சென்று அவர்களை பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் மட்டும் பிடிப்பட்டார். மற்ற 3 பேர் அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டனர். 

பின்னர் பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் மறந்தலை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அந்தோணி (வயது 47) என்பது தெரியவந்தது. மேலும் 10 சாக்குமூட்டைகளில் மணல் அள்ளியதும் தெரியவந்தது. இதையடுத்து அந்தோணியை கைது செய்து, மணலை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரையும் தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்