ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

Update: 2021-06-30 16:01 GMT
ஆறுமுகநேரி:

தூத்துக்குடி அருகே மங்களகிரி ராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 54). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் கோவிலுக்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் அங்கிருந்து புறப்பட்டு வந்த சண்முகசுந்தரம், முக்காணி பழைய பாலத்துக்கு கீழ்புறம் உள்ள தாமிரபரணி ஆற்றின் படித்துறையில் குளித்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் ஆழமான பகுதியில் மூழ்கி இறந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஆத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று, இறந்த சண்முகசுந்தரத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்