கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காத 17 திருமண மண்டபங்களில் ரூ.84 ஆயிரம் அபராதம் வசூல்
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காத 17 திருமண மண்டபங்களில் ரூ.84 ஆயிரம் அபராதம் வசூல் சென்னை மாநகராட்சி நடவடிக்கை.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த திருமண மண்டபங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும் ஓட்டல்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது மாநகராட்சி வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவினர் மேற்கொண்ட களஆய்வில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 17 திருமண மண்டபங்களுக்கு ரூ.84 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், திருவொற்றியூர் மண்டலத்தில் ஒரு மண்டபத்தில் ரூ.5 ஆயிரம் மாதவரம் மண்டலத்தில் 5 மண்டபங்களில் ரூ.14,500, ராயபுரத்தில் ஒரு மண்டபத்தில் ரூ.30 ஆயிரம், அண்ணாநகரில் 4 மண்டபங்களில் ரூ.21 ஆயிரம், கோடம்பாக்கத்தில் ஒரு மண்டபத்தில் ரூ.5 ஆயிரம், வளசரவாக்கத்தில் ஒரு மண்டபத்தில் ரூ.2 ஆயிரம், பெருங்குடியில் 4 மண்டபத்தில் ரூ.6,500 என மொத்தம் 17 மண்டபங்களில் ரூ.84 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.