தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் தொடர்ந்து பாரபட்சம் மத்திய அரசு மீது முத்தரசன் குற்றச்சாட்டு

தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் தொடர்ந்து பாரபட்சம் மத்திய அரசு மீது முத்தரசன் குற்றச்சாட்டு.

Update: 2021-06-30 10:50 GMT
சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா சூழலில் தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே மக்கள் உயிர்காக்கும் ஒரே வழியாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை வழங்குவதில் மத்திய பா.ஜ.க. அரசு தொடக்கத்தில் இருந்தே பாரபட்சம் காட்டி வருகிறது. இதனால் படுமோசமான அவலநிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தடுப்பூசி மருந்துகளை காலத்தில் வழங்காததால் தடுப்பூசி போடும் பணி தடைபட்டுள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலமும், பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்திய பின்னரும் மத்திய அரசு பாரபட்ச அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை. எனவே முதல்-அமைச்சர் கேட்டுள்ளபடி உற்பத்தியாகும் தடுப்பு மருந்துகளில் 90 சதவீத தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்து, தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசி மருந்துகளை தட்டுப்பாடு இல்லாமல் பா.ஜ.க. அரசு தொடர்ந்து வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்