உத்திரமேரூர் அருகே தூக்குப்போட்டு சிறுவன் தற்கொலை

உத்திரமேரூர் அருகே தூக்குப்போட்டு சிறுவன் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-30 06:23 GMT
உத்திரமேரூர்,

உத்திரமேரூர் ஒன்றியம் பெருநகரை அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி சத்யா. இவர்கள் இருவரும் அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.இதனால் அவரது மகன் தனுஷ் (வயது 17) மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். தாய், தந்தை இருவரும் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்களே என்று மனமுடைந்த தனுஷ் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது தாயார் சத்தியா பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்