சோழவரம் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; வாலிபர் பலி

சோழவரம் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தி்ல் வாலிபர் பலியானார்.

Update: 2021-06-30 05:53 GMT
பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). இவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் நிறுவனத் தில் விளம்பர மேலாளராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்துவிட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

சோழவரம் கிராமம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே உயிர் துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான ராஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அரியானா மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர் அசித்கார் (21) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் சிக்கி உயிரிழந்த ராஜ்குமாருக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்னர்தான் திருமணம் நடந்துள்ளது.

மேலும் செய்திகள்