சரியாக படிக்காததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்தார்: பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

சரியாக படிக்காததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-30 05:08 GMT
தாம்பரம்,

பம்மல், விஸ்வேச புரத்தை சேர்ந்தவர் ஏழுசாமி. இவரது மகள் சுவேதா வயது (17). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ்-2 படித்து வந்தார். சுவேதா, சரியாக வீட்டு வேலை செய்யாமலும், படிக்காமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதை, தந்தை ஏழுசாமி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சுவேதா நேற்று காலை படுக்கை அறையில் தூக்குப்போட்டு கொண்டார். இதையடுத்து அவரை மீட்ட குடும்பத்தினர் அருகேயுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்