அரசு பள்ளியில் 56 ஆண்டுகளில் முதல் முறையாக கல்வி அலுவலர் ஆய்வு

அரசு பள்ளியில் 56 ஆண்டுகளில் முதல் முறையாக கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்

Update: 2021-06-29 21:55 GMT
பனமரத்துப்பட்டி
சேலம் மாவட்டம் குரால்நத்தம் ஊராட்சியில் ஜருகுமலை மலை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 103 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சேலம் ஊரக மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியைகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் பள்ளியில் உள்ள அங்கன்வாடிக்கு சென்று அரிசி, பருப்பு போன்றவற்றை பார்வையிட்டார். இதையடுத்து 2021-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையை தொடங்கி வைத்த அவர், அனைத்து ஆசிரியர்களும் மலையில் இயங்கும் இந்த பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும், மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும் சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும் என்று கூறினார். இந்த ஆய்வின் போது பனமரத்துப்பட்டி வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் உடனிருந்தனர். 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த  பள்ளியில் 56 ஆண்டுகளாக இதுவரை எந்த கல்வி அதிகாரிகளும் நேரடி ஆய்வுக்கு சென்றதில்லை. 56 ஆண்டுகளில் முதல் முறையாக சேலம் கல்வி மாவட்ட அலுவலர் உதயகுமார்தான் ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்