சேலத்தில் நட்சத்திர ஆமை பிடிபட்டது வனத்துறையினர் மீட்டு உயிரியல் பூங்காவில் விட்டனர்

சேலத்தில் நட்சத்திர ஆமை பிடிபட்டது வனத்துறையினர் மீட்டு உயிரியல் பூங்காவில் விட்டனர்.

Update: 2021-06-29 21:55 GMT
சேலம்
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் முருகன் கோவில் தெருைவச் சேர்ந்தவர் ஹரிராம். நேற்று இவரது வீட்டின் முன்பாக செல்லும் சாக்கடை கால்வாயில் ஆமை ஒன்று கிடந்தது. இதுபற்றிய தகவல் அறிந்த அஸ்தம்பட்டி சேர்வராயன் தெற்கு வனசரக அலுவலக ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு கிடந்த ஆமையை பார்வையிட்டனர். அது நட்சத்திர ஆமை என்பது தெரிய வந்தது. உடனே வனத்துறையினர் அந்த ஆமையை பிடித்து குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் விட்டனர். இதுகுறித்து வனசரக அலுவலர் சின்னதம்பி கூறுகையில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக இந்த நட்சத்திர ஆமை அருகில் உள்ள மலை பகுதியில் இருந்து தண்ணீரில் அடித்து வரப்பட்டு சாக்கடை கால்வாய் வழியாக குடியிருப்பு பகுதிக்கு வந்து இருக்கலாம். இல்லை என்றால் அருகில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்ட மீன் அல்லது நண்டுகளுடன் அது வந்திருக்கவும் வாய்ப்புள்ளது என்றார். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்