குண்டர் சட்டத்தில் தொழிலாளி கைது

சங்கரன்கோவில் அருகே குண்டர் சட்டத்தில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-29 20:56 GMT
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பவுன்ராஜ் என்ற ஆறுமுகம் (வயது 50). கூலி தொழிலாளி. இவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நெடுங்குளம் கிராமத்தில் தன் வீட்டின் முன்பு உள்ள பொது பாதையில் நடக்கக்கூடாது என கூறி ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவரின் தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு அம்பாசமுத்திரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், சங்கரன்கோவில் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம் ஆகியோர் பரிந்துரையின்பேரில் தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ், பவுன்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அம்பை சிறையில் இருந்த பவுன்ராஜ் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார்.

மேலும் செய்திகள்