காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பாவூர்சத்திரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2021-06-29 20:53 GMT
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே மேல கிருஷ்ணபேரியில் கீழப்பாவூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. வட்டார தலைவர் எம்.ஆர்.தங்கரத்தினம் தலைமை தாங்கினார். கீழப்பாவூர் நகர தலைவர் குமரேசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக  பழனிநாடார் எம்.எல்.ஏ., மாநில பேச்சாளர் எஸ்.ஆர்.பால்துரை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்ட ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில், ஜூலை 15-ந் தேதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து ஊர்களிலும் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும். தமிழக சிறுபான்மை பிரிவு ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸை நியமித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்