ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது

நெல்லையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-29 20:50 GMT
நெல்லை:
பாளையங்கோட்டையை சேர்ந்தவர் இசக்கி (வயது 33). நெல்லை கோட்டூரை சேர்ந்தவர்கள் செல்வநாயகம் என்ற செல்வம் (28), கொம்பையா (31), தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (38). இவர்கள் 4 பேரும் கோட்டூர் பகுதியில் அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இசக்கி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்