ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் விடப்பட்டது.;
வாடிப்பட்டி,ஜூன்
வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிக துறைக்குட்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு விற்பனைக்குழு கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். இதில் 26 விவசாயிகள் 1 லட்சத்து 22 ஆயிரத்து 119 தேங்காய்களை 36 குவியல்களாக வைத்திருந்தனர். இந்த ஏலத்தில் 11 வியாபாரிகள் கலந்து கொண்டு அதிகபட்ச விலையாக ரூ.14.05-க்கும், குறைந்த பட்சமாக ரூ.8.52-க்கும், சராசரியாக ரூ.10.03-க்கும் ஏலம் எடுத்தனர். இதனால் ரூ.12.22 லட்சத்திற்கு வியாபாரம் நடந்தது. அதற்குரிய வங்கி காசோலை உடனடியாக பெற்று விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே போல் 4 விவசாயிகளின் 114.25 கிலோ கொப்பரை தேங்காயை 5 வியாபாரிகள் ரூ.91-க்கு ஏலம் எடுத்தனர்.