பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
க.பரமத்தி
தென்னிலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தில்லைக்கரசி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கார்வழி காட்டுப் பகுதியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த பாண்டிலிங்க புரத்தைச் சேர்ந்த ஆறுமுகம், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த முருகன், கனகராஜ், செல்வராஜ், பெருமாள், மருதமுத்து, குமார் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.41,700 மற்றும் ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.