வடமாநில பெண் தூக்குப்போட்டு தற்கொலை
வடமாநில பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
கரூர்
பஞ்சாப் மாநிலம் கிழக்கு லூதியானா பஸ்தி டிஜே தேவாஸ் பகுதியைச் சேர்ந்தவர் வருண் குமார் காசியாப். இவரது மனைவி பிரீத்தி (வயது 25). இவர்கள், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கரூர் அருகே உள்ள ஆட்டையம்பரப்பு பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் கூலி வேலைக்கு சென்று வந்தனர். இந்தநிலையில் குடும்பத்தை நடத்துவதற்கு போதிய வருமானம் இல்லாததால் பிரீத்தி மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் பிரீத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன், தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் பிரீத்தியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.