காரத்தொழுவில் திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில் 22 வயது இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

காரத்தொழுவில் திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில் 22 வயது இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Update: 2021-06-29 19:06 GMT
போடிப்பட்டி:

மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவில் திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில் 22 வயது இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ.விசாரணை நடத்தி வருகிறார்.
நேரம் சரியில்லை
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தையடுத்த குமரலிங்கத்தைச் சேந்தவர் சிவராமன். இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன் காரத்தொழுவைச் சேர்ந்த லட்சுமி (வயது 22) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. 
கணவருடன் 6 மாதங்கள் மட்டுமே வாழ்ந்த நிலையில் நேரம் சரியில்லை என்று கூறி கணவரைப்பிரிந்த லட்சுமி கடந்த 4 மாதங்களாக காரத்தொழுவில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஊர்ப்பெரியவர்கள் முன்னிலையில் பேசி லட்சுமியை கணவருடன் சேர்த்து வைப்பதற்கு முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
தீக்குளித்து தற்கொலை
அதன்படி நேற்று முன்தினம் கணவர் வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்று விடுவதற்கு ஏற்பாடு செய்தனர். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 6.30 மணியளவில் வீட்டிலிருந்த லட்சுமி தனது உடலில் மண்எண்ணையை  ஊற்றி தீ வைத்துக்கொண்டார். 
உடல் முழுவதும் நெருப்பு பற்றி எரிந்த நிலையில் லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 
ஆர்.டி.ஓ. விசாரணை
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கணியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஆர்.டி.ஓ.வும் விசாணைநடத்தி வருகிறார். திருமணமாகி 10 மாதங்களில் இளம்பெண் தீக்குளித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்