நாய் கடித்து புள்ளி மான் சாவு

திருச்சுழி அருகே நாய் கடித்ததில் புள்ளி மான் பரிதாபமாக இறந்தது.

Update: 2021-06-29 18:59 GMT
காரியாபட்டி, 
நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி குண்டாற்று பகுதியில் மான்கள், காட்டுப்பன்றிகள், மயில் அதிக அளவில் உள்ளது. இந்த காட்டுப்பகுதிகளில் வாழும் மான்கள் அவ்வப்போது தண்ணீர் தேடி கிராமத்திற்கு அருகே வரும் போது நாய்கள் கடித்து மான்கள் இறந்து வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நரிக்குடி அருகே ஒட்டங்குளம் கிராமத்திற்குள் தண்ணீர் தேடி வந்த புள்ளிமானை நாய்கள் துரத்தி கடித்ததில் மான் இறந்துவிட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனடிப்படையில் வனத்துறையினர் இறந்த மானை கைப்பற்றி வீரசோழன் கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து பின்னர் ஓட்டங்குளம் காட்டுப்பகுதியில் புதைத்தனர்.

மேலும் செய்திகள்