பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2021-06-29 18:22 GMT
தொண்டி, 
திருவாடானையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஓரியூர் நான்கு முனை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் குருசாமி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் சேதுராமு முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட மீனவர் சங்க துணைச்செயலாளர் தங்கராசு ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர்.  தாலுகா குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர் ஆதிரெத்தினம், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சந்தானம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா பொருளாளர் முருகேசன், மாட்டு வண்டி தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் பால்சாமி உள்பட பலர்கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்