ஆம்பூரில் மார்க்கெட்டை திறக்கக்கோரி வியாபாரிகள் தர்ணா
ஆம்பூரில் மார்க்கெட்டை திறக்கக்கோரி வியாபாரிகள் தர்ணா
ஆம்பூர்
தமிழகத்தில் கொரோனா பரவலலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆம்பூரில் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக பாங்கி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் கடைகளை திறக்க முடியாமல் அவதி அடைந்துள்ளனர்.
இதனால் மார்க்கெட்டை திறக்கக்கோரி காய்கறி, மளிகை மற்றும் இதர வியாபாரிகள் நேற்று காலை பாங்கி மார்க்கெட் எதிரே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.