வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதிநகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் மாரிகண்ணன் (வயது 24). சுமை தூக்கும் தொழிலாளி. மாரியப்பன் கடந்த 15 வருடத்திற்கு முன்பாக இறந்துவிட்டார். இந்த நிலையில் மாரிகண்ணனின் தங்கையின் திருமண செலவிற்கு வீட்டில் அதிக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் மாரிகண்ணன் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை தாயார் கண்டித்துள்ளார்.
சம்பவத்தன்றும் மாரிகண்ணன் வேலைக்கு செல்லாமல் இருந்ததை தாயார் கண்டித்தார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாரிகண்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.