மரம் விழுந்ததில் முறிந்த மின்கம்பம்

பெரும்பாறை அருகே மரம் ஒன்று விழுந்ததில் மின்கம்பம் முறிந்தது.

Update: 2021-06-29 17:21 GMT
திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே மஞ்சள்பரப்பில் உள்ள தனியார் தோட்டத்தில் நேற்று காலை ஒரு இலவமரம் வேரோடு சாய்ந்து அருகே இருந்த மின்கம்பம் மீது விழுந்தது. 


இதில் மின்கம்பம் முறிந்து வயர்கள் அறுந்து தொங்கின. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. 

பின்னர் மரம் அப்புறப்படுத்தப்பட்டு மின் ஊழியர்கள் பழுதை சரிசெய்து மின்சாரம் வழங்கினர்.

மேலும் செய்திகள்