முதுமக்கள் தாழியை சுற்றியுள்ள மண்ணை அகற்ற நடவடிக்கை

முதுமக்கள் தாழியை சுற்றியுள்ள மண்ணை அகற்ற நடவடிக்கை

Update: 2021-06-29 17:11 GMT
திருப்புவனம்
திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த கீழடியில் ஏழாம் கட்ட ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் பணிகள் நடைபெற்று வருகிறது. கொந்தகையில் பத்து முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் ஒரு முதுமக்கள் தாழி எந்த விதமான சேதாரமில்லாமல் மூடியுடன் முழு அமைப்பாக கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஏற்கனவே இரண்டு முதுமக்கள் தாழிகளின் உள்ளே தோண்டி ஆய்வு செய்யப்பட்டது. அதில் மனித மண்டை ஓடு, விலா எலும்புகள், மூட்டு எலும்புகள், கை கால் விரல் எலும்புகள், இரும்பு வாள், கூம்பு வடிவ கிண்ணங்கள், கருப்பு சிவப்பு பல வண்ணம் கொண்ட மண் சட்டிகள், தாடை எலும்பு உள்பட பல பொருட்கள் இருந்தன. மற்ற முதுமக்கள் தாழிகள் மணல் சூழ்ந்து அப்படியே இருந்தது. தற்சமயம் மணல் சூடியிருந்த முதுமக்கள் தாழியில் மணலை அகற்றி ஆய்வு செய்வதற்கு ஏதுவாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே விரைவில் மற்ற முதுமக்கள் தாழிகளை ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிய வருகிறது. கொந்தகையில் சில தினங்களுக்கு முன்பு சுமார் 4 அடி நீளத்தில் மனித முழு உருவ எலும்புக்கூடு சேதாரமில்லாமல் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்