மர கிளையை வெட்டியதால் மோதல்; 2 பேர் மீது வழக்குப்பதிவு

மர கிளையை வெட்டியதால் மோதல்; 2 பேர் மீது வழக்குப்பதிவு;

Update: 2021-06-29 17:05 GMT
அரிமளம், ஜூன்.30 -
அரிமளம் அருகே உள்ள தெக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (வயது 40). இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கும் முந்திரி மர கிளையை வெட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது, தங்கராஜ், அவருடைய மகன் அருண்குமார் ஆகியோர் சேர்ந்து கணபதியை தாக்கி அரிவாளை தூக்கி வீசினர். இதில் காயம் அடைந்த கணபதி அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக கணபதி கொடுத்த புகாரின் பேரில் கே.புதுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி தங்கராஜ், அருண்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்