இளம்பெண்ணின் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்த 6 பேர் மீது வழக்கு

இளம்பெண்ணின் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்த 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-06-29 16:29 GMT
பேரையூர்,ஜூன்.
பேரையூர் தாலுகா சின்னக்கட்டளையைச் சேர்ந்தவர் முத்துவேல். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களது 17 வயது மகள் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து அவரது உடலை முத்துவேல், கிருஷ்ணவேணி மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு தெரியாமல் எரித்து விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த  சின்னக்கட்டளை கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாரி சேடபட்டி போலீசில் புகார் செய்தார். 
இது தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்