வேலூர் அருகே அலோபதி முறையில் சிகிச்சை அளித்த கிளினிக்குக்கு ‘சீல்'

வேலூர் அருகே அலோபதி முறையில் சிகிச்சை அளித்த கிளினிக்குக்கு ‘சீல்' வைக்கப்பட்டது. ஆயுர்வேத டாக்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-06-29 16:18 GMT
வேலூர்

அலோபதி முறையில் சிகிச்சை

வேலூரை அடுத்த ஊசூரில் ஆயுர்வேதம், யுனானி மருத்துவம் படித்து விட்டு அலோபதி முறையில் சிகிச்சை அளிப்பதாக வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் யாஸ்மினுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் அணைக்கட்டு மருத்துவ அலுவலர், மருந்துகட்டுப்பாட்டு அலுவலர், கிராமநிர்வாக அலுவலர் மற்றும் அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று ஊசூர் பகுதியில் உள்ள கிளினிக்குகளில் திடீரென சோதனை நடத்தினர். 

அப்போது ஊசூர் கிருஷ்ணாநகரில் உள்ள ஒரு கிளினிக்கில் நடத்திய சோதனையில், வேலூர் தொரப்பாடியை சேர்ந்த விஜயராஜ் (வயது 41) என்பவர் ஆயுர்வேத மருத்துவம் படித்து விட்டு அலோபதி முறையில் சிகிச்சை அளித்தது தெரிய வந்தது.
கிளினிக்குக்கு ‘சீல்'

அதையடுத்து அந்த கிளினிக்கை பூட்டி வருவாய்த் துறையினர் ‘சீல்'வைத்தனர். ஆயுர்வேத முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது குறித்து விஜயராஜிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்