கோவில்களை திறக்க கோரி தீச்சட்டி ஏந்தி பிரார்த்தனை

கோவில்களை திறக்க கோரி தீச்சட்டி ஏந்தி பிரார்த்தனை

Update: 2021-06-29 15:34 GMT
கோவை

கோவில்களை திறக்க கோரி இந்து மக்கள் புரட்சிபடை சார்பில் கோவை கிராஸ்கட் ரோடு மகா மாரியம்மன் கோவிலில் தீச்சட்டி ஏந்தி பிரார்த்தனை நடைபெற்றது. 

இதற்கு அந்த அமைப்பின் மாநில தலைவர் பீமா பாண்டி, நிர்வாகிகள் கண்ணன், சரவணன், சத்ரபதி அறக்கட்ட ளை தலைவர் சிவாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இது குறித்து பீமா பாண்டி கூறுகையில், கொரோனா பரவல் குறைந்து வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. 

அது போல் கோவில்களை திறக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்