கோவை
கோவை மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் 746 பேர் உள்ள னர். இதில் 462 பேருக்கு ஏற்கனவே அடையாள அட்டை வழங்கப் பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசின் சமூக நலத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள் பெறும் வகையில், 220 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட கலெக்டர் சமீரன் வழங்கினார்.
இதையடுத்து குடும்ப அட்டை இல்லாமல், அடையாள அட்டை மட்டும் வைத்துள்ள மூன்றாம் பாலினத்தவர்கள் 252 பேருக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி, குடும்ப அட்டை உள்ள 340 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.
இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 20 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், சமூக நல அலுவலர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.