தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம்

தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம்

Update: 2021-06-29 15:26 GMT
கணபதி

தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை காக்க கோவை மாநக ராட்சி சார்பில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

கோவை மாநகரில் அரசு பள்ளி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு கட்டணம் அதிகம் என்ப தால் பொதுமக்கள் அரசு மையங்களையே நாடி வருகின்றனர்.

 அந்த வகையில் நேற்று கணபதி, காந்திமாநகர், சின்னவேடம் பட்டி, உடை யாம்பாளையம் அஞ்சுகம் நகர் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஏமாற்றம்

இதனால் நேற்று அதிகாலை முதலே பொதுமக்கள் தடுப்பூசி மையங்க ளான பள்ளிகள் முன்பு குவியத் தொடங்கினர். ஒவ்வொரு மையத்தி லும் 200 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்க ப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டது. 

இதில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஒரு மையத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கி தடுப்பூசி செலுத்துவது இல்லை. எனவே அதில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்றனர்.

டோக்கன் முறை

தடுப்பூசி செலுத்த டோக்கன் வழங்கும்முறை ரத்து செய்யப்படுவதாக வும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
 ஆனாலும் தற்போது வரை டோக்கன் வழங்கும் முறை நடைமுறை நீடித்துக் கொண்டு வருகிறது.

கோவையில் தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கவும், தடுப்பூசி கிடைக்காமல் திரும்பி செல்வதை தவிர்க்கவும் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்ற னர். அந்த வகையில், புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 

புதிய நடைமுறை அமல்

இது தொடர்பாக சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது

ஒவ்வொரு மையத்துக்கும் மக்கள் அதிகம் வருவதால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடியாத நிலை உள்ளது. 

இதை தவிர்க்க ஒரு நாள் மாநகராட்சியிலும், மறுநாள் ஊரக பகுதியில் உள்ள மையங்களிலும் தடுப்பூசி செலுத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒரு மையத்தில் 400 முதல் 500 தடுப்பூசி செலுத்த முடியும். 

நேற்று ஊரக பகுதிகளில் மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நடைமுறையால் எந்த பிரச்சினையும் இன்றி தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) மாநகராட்சியில் மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்