பாதிப்பு குறைந்தது: தமிழகத்தில் 4,804 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் பாதிப்பு குறைந்தது. 4,804 பேருக்கு கொரோனா பாதிப்பு எற்பட்டு இருக்கிறது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 58 ஆயிரத்து 711 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2,742 ஆண்கள், 2,062 பெண்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 804 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 203 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 682 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 597 பேரும், ஈரோட்டில் 506 பேரும், சேலத்தில் 318 பேரும், சென்னையில் 291 பேரும், திருப்பூரில் 294 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 18 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
98 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 16 லட்சத்து 77 ஆயிரத்து 758 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 14 லட்சத்து 44 ஆயிரத்து 445 ஆண்களும், 10 லட்சத்து 26 ஆயிரத்து 195 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 24 லட்சத்து 70 ஆயிரத்து 678 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 89 ஆயிரத்து 459 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 56 அயிரத்து 74 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 61 பேரும், தனியார் மருத்துவமனையில் 37 பேரும் என 98 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 9 பேரும், கோவையில் 7 பேரும், திருவள்ளூர், சேலம், ராணிப்பேட்டை, கடலூரில் தலா 6 பேரும், கன்னியாகுமரியில் 5 பேரும், சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, தஞ்சாவூர், திருச்சியில் தலா 4 பேர் உள்பட நேற்று மட்டும் 30 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 22 பேர் இணை நோய் அல்லாதவர்கள் ஆவர். அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 32 ஆயிரத்து 388 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
71,112 படுக்கைகள் காலி
தமிழகத்தில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளில் 9 ஆயிரத்து 770 பேரும், ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகளில் 4 ஆயிரத்து 999 பேரும், ஐ.சி.யு படுக்கைகளில் 4 ஆயிரத்து 183 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்தவகையில் நேற்று 38 ஆயிரத்து 941 ஆக்சிஜன் படுக்கைகள், 26 ஆயிரத்து 437 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 5 ஆயிரத்து 734 ஐ.சி.யு படுக்கைகள் என மொத்தம் 71 ஆயிரத்து 112 படுக்கைகள் மருத்துவமனைகளில் காலியாக உள்ளது. அதேபோல், கொரோனா பராமரிப்பு மையங்களில் 7 ஆயிரத்து 168 பேர் சிகிச்சையில் உள்ளனர். அந்த வகையில் 58 ஆயிரத்து 515 படுக்கைகள் காலியாக இருக்கின்றன.
6,533 பேர் ‘டிஸ்சார்ஜ்’
கொரோனா பாதிப்பில் இருந்து 6,533 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 1,089 பேரும், ஈரோட்டில் 603 பேரும், திருப்பூரில் 448 பேரும், சேலத்தில் 543 பேரும் அடங்குவர். இதுவரையில் 23 லட்சத்து 97 ஆயிரத்து 336 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 40 ஆயிரத்து 954 பேர் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.