திருவொற்றியூர் தபால் நிலையம் முன்பு பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர் தபால் நிலையம் முன்பு பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

Update: 2021-06-29 09:37 GMT
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் தபால் நிலையம் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பகுதி செயலாளர் எஸ்.கதிர்வேல், செயற்குழு உறுப்பினர் செல்வசிங், ஆர்.ஜெயராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அன்புசெழியன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்