ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களிலிருந்து நகைகளை திருடியவர் கைது

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களிலிருந்து நகைகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-06-29 07:27 GMT
புதுச்சேரி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களிலிருந்து நகைகளை திருடிவந்த ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.

ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களிலிருந்து நகைகள் காணாமல் போவதாக கோரிமேடு போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்ததையடுத்து, விசாரணையில் ஈடுபட்டனர்.

அதில், பிணவறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் முத்துகிருஷ்ணன் என்பவர் நகைகளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து இரண்டரை சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்