பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வீட்டுக்கு தீ வைத்த டிரைவர் கைது

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வீட்டுக்கு தீ வைத்த டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-06-29 06:11 GMT
ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி ராதா நகரைச் சேர்ந்தவர் கவிதா (வயது 32). இவர், காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இதற்காக காய்கறிகள் வாங்க கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வேளச்சேரி அன்பழகன் நகரை சேர்ந்த வேன் டிரைவர் முருகன் (65) என்பவர் வாகனத்தில் சென்று வருவது வழக்கம். அப்போது அவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு கவிதா வீட்டுக்கு சென்ற முருகன், இதுதொடர்பாக தகராறு செய்தார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன், திடீரென கவிதாவின் வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தார். இது குறித்த புகாரின்பேரில் வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்