மீன்பிடித்த போது தவறி விழுந்ததால் குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு
திருவள்ளூர் அருகே மீன்பிடித்த போது குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த காக்களூர் பங்களா தோப்பு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 48). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மதுபோதையில் தனது வீட்டின் அருகில் உள்ள தாமரைக் குளத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அவர், எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
.இதை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு, வெளியே கொண்டு வந்தனர். பின்னர் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்து போனார். இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.